
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சட்டவிரோத கொல்களம்
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சட்டவிரோத கொல்களம் நடத்திய மூவருக்கு 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம்.
நாவந்துறை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில், பொது சுகாதார பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையிலான குழுவினர் கடந்த 2023 ஜனவரி 3ஆம் திகதி நடத்திய பரிசோதனையில் சட்டவிரோதமாக இயங்கிய மாடுகள் கொல்களம் ஒன்று பிடிபட்டது. அத்துடன், 150 கிலோவுக்கு மேற்பட்ட மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் தலா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வீதம் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிவான் எஸ். லெனின்குமார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)