
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சஜித் தலைமையில் உதயமாகும் ஐக்கிய மக்கள் கூட்டணி
சஜித் பிரேமதாஸவை தலைவராாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஒப்பந்தம் நேற்று (08) வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ், சிறீ லங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பினர் உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.
எனினும், இந்தக் கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்த ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அந்தக் கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அடுத்த வாரமே யாருக்கு ஆதரவு என்று முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)