கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (22.12.2021)

நாட்டில் புதிய வகை ஒமைக்ரோன் வைரஸ் மாறுபாடு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் சமீபத்திய உயிரியல் பரிசோதனையில் புதிய ஒமைக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கையில் பதிவாகும் கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்தது.

இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே உயிரிழந்தது.

இன்று புதன்கிழமை (22.12.2021) அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குழந்தை காலை 6 மணியளவில் திடீரேன மூச்சடங்கி காணப்பட்டது.

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் பிரேதபரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (22.12.2021)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House