கோமாக்குப் போன உண்மை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கோமாக்குப் போன உண்மை

நான்கு ஆண்டுகளாகியும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மை உறங்கிக் கொண்டே இருக்கின்றது. அந்த உண்மையைக் கோமா நிலையில் வைத்திருப்பவர்கள் யார்? அதனை சாகடிக்க சதி செய்பவர்கள் யார்? இவைதான் நியாயவாதிகளின் கேள்விகளாக உள்ளன. என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி றிவேரா ஓய்வு பெற்றுச் செய்வதற்கு முன்பாக ஓர் உண்மையை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அதாவது, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் வெளிப்படுத்தாத உண்மைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மையானது, அதிகார வர்க்க ஆட்சிமாற்றத்திற்கான சதித்திட்டமாகப் பேசப்பட்டு வருகிறது.

கொழும்புப் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அந்த உண்மையைக் கண்டறிவதற்காக உச்சபட்ச முயற்சியை எடுத்துள்ளார். அதற்காக தனது பலத்த குரலை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ரோம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை ஒலித்துள்ளார். அந்த நீதிக்கான குரலின் தேடுகை ஓயாது என்பதை உணரக் கூடியதாகவுள்ளது. அவரது உரத்த குரவின் காரணமாக முன்னாள் சட்டமா அதிபர் றிவேரா பயந்கரவாதத் தடுப்புக் குற்றப்பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு செல்லாமல் தனது சட்டத்தரணியை விசாரணைக்கு அனுப்பியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்காக அதிகாரத் தேவைக்காக அப்பாவி மக்களை பலியெடுத்த அந்த சர்வாதிகார கீரோ (hero) யார்? ஜனநாயக சீரோ (zero) யார்? அதனை ஏன் அதிகார வர்க்கம் பாதுகாக்கின்றது? எய்தவனை ஏன் கண்டுபிடிக்க விரும்பவில்லை? அம்புகள் வெடிப்பில் இறந்துள்ளன. இன்னும் சில அம்புகளும் அம்புகள் அம்பலாதவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து மைக்கப்பட்டுள்ளனர்.

மறைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையிலுள்ள உண்மையை ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக் கொணர வேண்டும் என்பதே பேராயரினதும், பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளதும், நியாயவாதிகளதும் வேண்டுதலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோமாக்குப் போன உண்மை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More