
posted 9th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்த அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேற்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மறைந்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த அண்ணாமலை சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்றுக் (08) காலை திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்த அண்ணாமலை அங்கு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
திருக்கோணேஸ்வரர் ஆலய விஜயம் தொடர்பில் அண்ணாமலை தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
இலங்கையின் முக்கிய பஞ்ச ஈஸ்வர கோயில்களில் ஒன்றாகும். மேலும் ராமாயண யாத்திரைச் சுவடுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் அறிவுறுத்தலின் பேரில் ரிஷி அகஸ்தியரால் கட்டப்பட்ட கோயிலை இராமாயணம், ராமேஸ்வரத்திற்குப் பிறகு பிரம்மஹஸ்தி தோஷத்திலிருந்து விடுபட இரண்டாம் லிங்கத்தை கட்டியது.
16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர்கள் அழிந்ததைத் தூண்டுதலாக, இன்றும் சனாதன தர்மத்திற்கும் இந்து மதத்தின் ஆவிகளுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கிறது கோவில் என பதிவிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி