posted 23rd September 2021
அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் ஊடக சந்திப்பு புதன்கிழமை (22.09.2021) நடாத்தினார். அப்பொழுது மன்னாரில் கொரோனா தொடர்பாக அவரிடம் வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் சுகாதார திணைக்களத்தின் அர்ப்பணிப்பான சேவையால் கொரோனா தொற்றும் மரணமும் மிக குறைந்தே காணப்படுகின்றன. ஆனால், அறுபது வயதுக்கு மேற்பட்ட 255 பேர் இன்னும் கொரோனா தடுப்பூசிகள் போடவில்லையென கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேபோன்று தொடர்ச்சியாக இருபது வயது தொடக்கம் முப்பது வயதுடையவர்களுக்கும் இவ்வாறு முப்பது வயது தொடக்கம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது மாவட்ட சுகாதார திணைக்கள அமைப்பினர் தங்களிளை மிக சிறப்பாக பூரண அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டு வருகின்றனர். இதன் பயனாகவே மன்னார் மாவட்டத்தில் மிக குறைவான அளவில் கொரோனா தொற்றையும் மரணத்தையும் காணக்கூடியதாக இருக்கிள்றது என தெரிவித்தார்.
வாஸ் கூஞ்ஞ