கொக்குத்தொடுவாய் புதைகுழி - செவ்வாய்க்கிழமை அகழப்படும்!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கொக்குத்தொடுவாய் புதைகுழி - செவ்வாய்க்கிழமை அகழப்படும்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை எதிர்வரும் 5ஆம் திகதி - செவ்வாய்க்கிழமை மீண்டும் அகழ்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (31) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசேட வழக்கிலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் நடந்த விசேட வழக்கில், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி க. வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன், சட்டத்தரணிகளான எம். ஏ. சுமந்திரன், வி கே. நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, வி. எஸ். தனஞ்சயன் , காணாமல் போனோர் தொடர்பான பணிமனையின் சட்டத்தரணிகளான எஸ். துஷ்யந்தினி, ஜெ. தர்பரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ம. செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா. சண்முகதாசன், கிளிநொச்சி - முல்லைத்தீவு பிராந்திய பொலிஸ் மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

அகழ்வு பணியை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த ஜூன் 29ஆம் திகதி குடிதண்ணீர் விநியோகத்துக்காக கிடங்கு வெட்டியபோது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் திகதி நீதிமன்றின் அனுமதியுடன் தோண்டப்பட்டபோது 13 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு நீதிமன்றின் அனுமதியுடன் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் புதைகுழி - செவ்வாய்க்கிழமை அகழப்படும்!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More