கைப்பற்றப்பட்ட 458 கிலோ கஞ்சா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் நேற்று புதன்கிழமை காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

நெடுந்தீவுக் கடலில சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர். இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மண்டைதீவைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

கைப்பற்றப்பட்ட 458 கிலோ கஞ்சா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)