கூட்டமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பலமான கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவும் கிழக்கு சார்ந்த கூட்டமைப்பிற்கான ஒரு அழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய அனைவரையும் ஒன்றிணைத்து புதிய கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

துயர் பகிர்வோம்

உதாரணமாக, போராட்ட அமைப்புக்களில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் போராட்டங்களின் வலி தெரிந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில அமைப்புகள் போலி தேசியவாதிகளை நம்பியே செயற்படுவதாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)