
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லிப்பளை மக்கள்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை அல்லிப்பளை மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் இன்று (06) சனிக்கிழமைஇடம்பெற்றது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளது. இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து கவனயீர்ப்பாக சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கவனம் செலுத்த வேண்டும் என மகஜரும் கையளிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)