குடும்பஸ்தர் ரயில் மோதி மரணம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

குடும்பஸ்தர் ரயில் மோதி மரணம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் சந்திவெளி - ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மதுபோதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.

வழமையாக காலையில் கடலுக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் இவர், சில நாட்களில் இரவு நேரத்திலும் கடலுக்கு சென்று வருவார்.

சம்பவ தினம் இவர் அதிக போதையுடன் கடலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற இவர், ஜீவபுரம் ரயில் பாதையில் அமர்ந்திருந்தபோது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும், அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே ரயிலில் மோதுண்டு மரணமடைந்தார்.

இவரது சடலத்தை ஆடைகளை வைத்தே உறவினர்கள் அடையாளம் காட்டினர்.சடலம், அதே ரயில் மூலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டது.

சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பணித்தார்.

குடும்பஸ்தர் ரயில் மோதி மரணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More