குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக வளாகத்தில் போதகர் கமலகுமாரன் தலமையில் நேற்று (19) வெள்ளிக்குழமை பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டது.

சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், வடமராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் சத்தியசீலன், நிலைய போதகர் கமலகுமாரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சித்த வைத்திய கலாநிதி நிதர்சினி, குடத்தனை கிராம சேவகர் பிரசாந்த் துவாகரா, அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை பிரதி அதிபர் திருமதி பானுமதி, முன்பள்ளி ஆசிரியை திருமதி ரஜனி உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்

அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை போதகர் வளாக கொடியையும், முன்பள்ளி கொடியினை பொறுப்பு ஆசிரியையும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் மாணவர்களுக்கான பரிசில்களை வடமராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் சத்தியசீலன், நிலைய போதகர் கமலகுமாரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சித்த வைத்திய கலாநிதி நிதர்சினி, குடத்தனை கிராம சேவகர் பிரசாந்த் துவாகரா, அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை பிரதி அதிபர் திருமதி பானுமதி, முன்னாள் போதகர் டேவிட் நிலுக்சிகன், உட்பட பலரும் வழங்கிவைத்தனர்.

இதில் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More