
posted 14th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்குப் பறிபோவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு வேடிக்கை பார்க்காது
கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் (13) செவ்வாய் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில்,
“கிழக்கின் முதுசொமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாக செயல்பட்டு அரசுடைமையாக்க திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாக கண்டிப்பதோடு ஆலய செயல்பாடுகள் சுயாதீனமாக நடைபெற வேண்டும்.
ஆளுநரின் அடாவடிகள் தொடர்ந்தால் வடக்கு - கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
வடக்கும் - கிழக்கும் தமிழர் தாயகம், கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக! அரசின் எலும்புத் துண்டுகளுக்காக தமிழரின் வரலாற்று தொன்மைகளை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரை கோருகின்றோம்” என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)