கிளிநொச்சி சேவைச் சந்தையில் 10 கடைகள் உடைப்பு - பொலிசார் தீவிர விசாரணை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி சேவைச் சந்தையில் 10 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த உடைப்பு சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் குறித்த கடைகளை உடைக்கும் காட்சிகள் CCTVகளில பதிவாகியுள்ளது.

உடைக்கப்பட்ட கடைகள் பெரும்பாலும் புடவைக்கடைகள் என்பதுடன், பாத்திர கடைகள், அழகுசாதன கடைகள் மற்றும் தேனீர் கடையும் உள்ளடங்குகின்றது.

சம்பவத்தில் பொருட்கள் திருடப்படவில்லை என்பதுடன், தேனீர் கடை ஒன்றில் சிறு தொகை பணம் மற்றும் இரு குளிர்பானங்கள், சிற்றுண்டிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஜெயந்தன் தலைமையிலான குற்றவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி சேவைச் சந்தையில் 10 கடைகள் உடைப்பு - பொலிசார் தீவிர விசாரணை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY