
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளி /பளை மத்திய கல்லூரி மாணவ சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் வைபவம்
கிளி /பளை மத்திய கல்லூரியின் சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் வைபவம் 5ஆம் திகதி திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் திரு கு.ரவீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் திரு. நடேசபிள்ளை காந்தரூபன் (London) ஆகியோரும் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக கிளி. மாவட்ட சாரண ஆணையாளர் சி.விக்னேஸ்வரன், அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பளை கோட்ட உதவி சாரண ஆணையார் த.நிர்மல், சாரணிய உயர் விருதான ஜனாதிபதி விருது பெற்ற. செல்வி யோ.கோமகள், உதவி அதிபர், பகுதித்தலைவர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்,
மேலும் இந்நிகழ்வில் புதிதாக இணைந்த சாரண மாணவர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வினை பாடசாலை சாரணிய ஆசிரியர் திரு ப. நிசாந்தன் மற்றும் ச. டனிஸ் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)