காலத் தவறுகள் படிப்பினைகளை பாடங்களாக எடுக்காவிடில் விளைவுகள் பின்னடைவுக்கே வழிகாட்டும் - குகதாஸ்

தற்போதைய அரசியல் கள சூழல் என்பது இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தமிழர்களுக்கு சாதகமாக புறச் சூழல் காரணிகளை கொண்டமைந்துள்ளது. தமிழ்த் தலைமைகள் கடந்த காலத் தவறுகள் படிப்பினைகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் போன்றவற்றை சிந்திக்காது எடுக்கின்ற முடிவுகள் தொடர் பின்னடைவுகளையே தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது

இலங்கையின் சிங்கள பேரினவாத ஆட்சியாளரை தொடர்ந்து விமர்சிப்பதால் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு உள் நாட்டுக்குள் தீர்வு கண்டு விட முடியாது மாறாக குரோதங்களும் வன்மங்களும் ஆழமாக வேரூன்றி இனவாதம் வீச்சுப்பெற வழிவகுக்கும் இது தான் இது கால வரை தொடர் கதையாக உள்ளது.

தமிழ்த் தலைமைகள் கடந்த காலத் தவறுகள் படிப்பினைகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் போன்றவற்றை சிந்திக்காது எடுக்கின்ற முடிவுகள் 2009 ஆம் ஆண்டுகளின் பின்னர் தொடர் பின்னடைவுகளையே தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழர் பிரதிநிதிகள் வெறுமனே இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆட்சியாளரை விமர்சிப்பதால் எது வித நன்மைகளும் இல்லை என்பது கடந்தகால அனுபவம் மாறாக தனி மனித வாக்கு வங்கிகளையே உறுதி செய்யும்.

தற்போதைய அரசியல் கள சூழல் என்பது இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தமிழர்களுக்கு சாதகமாக புறச் சூழல் காரணிகளை கொண்டமைந்துள்ளது குறிப்பாக பிரந்திய பூகோளப் போட்டி கூர்மையடைந்து இலங்கை ஆட்சியாளர் பலவீனம் அடைந்து உள்ள நிலையை தமிழர் தரப்பு ஒற்றுமையாக சிறப்பான தலைமைத்துவத்தை கொடுத்து கையாள முடியாத கையறு நிலையில் உள்ளது.

சந்தர்ப்பங்களை தவற விடுவதுடன் தனிமனித நிகழ்ச்சி நிரல்களால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலத் தவறுகள் படிப்பினைகளை பாடங்களாக எடுக்காவிடில் விளைவுகள் பின்னடைவுக்கே வழிகாட்டும் - குகதாஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More