கல்விக்கான ஊக்குவிப்பு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிந்தவூர் றிஸாலா சமூக சேவைகள் அமைப்பு பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க இருக்கின்றது

மேற்படி அமைப்பின் கல்விப் பிரிவு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கல்விப் பிரிவின் தலைவர் மௌலவி. எம்.யூ. ஆசிக் அலி (காஸிபி) தெரிவித்தார்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் வறிய மக்களுக்கான வீடமைப்பு மற்றும், நீர், மின்சார இணைப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை றிஸாலா சமூக வேசைகள் அமைப்பு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்த சமூகப் பணிகளின் ஓர் அங்கமாக வறிய மாணவர்களுக்கு (சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு) கற்றல் உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கும் செயற்திட்டடம் ஒன்றை அமைப்பின் கல்விப் பிரிவு முன்னெடுக்கவுள்ளது.

இதற்கென பொது மக்களிடமிருந்து நிதி திரட்டும் நோக்குடன் தொண்டர்கள் சகிதம் களப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி முதலாவது நிதி திரட்டல் முகாம் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் ஸ்தாபிக்கப்பட்டு இடம்பெற்றதுடன், எதிர்வரும் வாரங்களில் பரவலாக ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அருகிலும் நிதி திரட்டும் முகாம்களை ஏற்படுத்தி மாணவர் கல்வி ஊக்குவிப்புக்கான நிதி திரட்டல் இடம்பெறவுள்ளதாகவும் தலைவர் மௌலவி ஆசிக் அலி (காஸிபி) தெரிவித்தார்.

றிஸாலா சமூக சேவை அமைப்பு முன்னெடுத்து வரும் சன்மார்க்கப் பணிகளுடனான சமூகப் பணிகள் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான ஊக்குவிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)