
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் சதுரங்கத்தில் சம்பியன்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு, தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகினர். திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)