
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை தாளையடியில் திறந்தார் ஜனாதிபதி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 266 மில்லியன் ரூபா திட்டத்தில் தாளையடியில் அமைக்கப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வெள்ளி திறந்து வைத்தார்.
இன்று (02) காலை 10:30 மணிளவில் உள்ள சுப வேளையில் இந்த திறப்பு விழா இடம் பெற்றது.
பெருந்தொட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்.
மீன்பிடி அமைச்சர் டக்ளஸ்தேவானந்த, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுச் செயலாலார் ஏ.ஸீ.ஏ. நபீல், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆ.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்நாயக்க, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி வந்தன விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதி சக்காவா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுவனத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு மீனவ மக்களின் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல தாமதங்களுக்கு மத்தியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்பு பிரிவுக்குட்பட்ட 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)