ஏறாவூரில் கொள்ளையர்களால் கடை உரிமையாளர் படுகொலை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஏறாவூரில் கொள்ளையர்களால் கடை உரிமையாளர் படுகொலை

போதைப்பொருளுக்கு அடிமையான கும்பலைச் சேர்ந்தவர்கள் கடையில் கொள்ளையடிக்க முற்பட்டபோது அதனைத் தடுத்த கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் – ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (06) செவ்வாய்க்கிழமை அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

போதைப்பொருள் பாவனையாளர்கள், வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் அதனை கடை உரிமையாளர் தடுத்த போது கொலை இடம்பெற்றதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில் சில்லறைக் கடை நடத்தி வந்த 45 வயதுடையவரே தலைப்பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏறாவூரில் கொள்ளையர்களால் கடை உரிமையாளர் படுகொலை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)