எரிபொருள் நிலையத்தில் குழப்பம் - ஏழு பேர் கைது! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வவுனியா, வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலக்க மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிபொருள் நிலையத்தில் குழப்பம் - ஏழு பேர் கைது! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY