எந்தவொரு தீர்மானத்தையும் தமிழ் அரசு எடுக்கவில்லை - சிறீதரன் எம். பி.

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எந்தவொரு தீர்மானத்தையும் தமிழ் அரசு எடுக்கவில்லை - சிறீதரன் எம். பி.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக சுமந்திரன் எம். பி. கூறியிருந்தார். அவ்வாறான தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சி எடுத்ததா என்று சிறீதரன் எம். பியை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பதா என்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பில் யாரேனும் பேசினால் அது அவர்களின் சொந்த விருப்பு மட்டுமே - அது கட்சியின் தீர்மானம் அல்ல.

ஜனாதிபதித் தேர்தல் திகதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி விரைவில் கூடி தனது நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்கும், என்றார்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எந்தவொரு தீர்மானத்தையும் தமிழ் அரசு எடுக்கவில்லை - சிறீதரன் எம். பி.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)