எதிர்பாராத எதிர்ப்புகளைச் சந்தித்த பிரதமர்

மதவழிபாட்டுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்துக்கு சென்றார். அவரின் வருகைக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

அநுராதபுரம் சிறீ மஹாபோதி, மிரிஸவெட்டி, ருவன்வெலிசாய ஆகிய விகாரைகளில் வழிபாடாற்றவே பிரதமர் சென்றிருந்தபோது அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் நகரில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தரப்பினர், ருவன்வெலிசாயவுக்கு அருகில் வைத்து பிரதமருக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன் பின்னர் மிரிஸவெட்டி விகாரைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சென்றபோது அங்கும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பிரதமரின் வாகன பேரணி சென்ற போது வீதியில் குழுமியிருந்த ஆதரவாளர்கள் ஹூ சத்தம் எழுப்பியதுடன், அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

'நாட்டை சீரழித்துவிட்டனர், நாம் இரத்தம் சிந்துகின்றோம்' உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விகாரையொன்றுக்கு சென்ற போது வழிபாட்டுக்காக வருகை தந்திருந்தவர்கள் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத எதிர்ப்புகளைச் சந்தித்த பிரதமர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More