உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் - ஜனாதிபதி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் - ஜனாதிபதி

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவினால் காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுக்க அது பக்கபலமாக அமைந்திருக்கும் என்றும் இது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் இவ்வருடம் டுபாயில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான மாநாட்டில் மேற்படி விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிவிக்க உள்ளதாகவும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 10வது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருதுவழங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது.

ஆகவே ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தில் வியாழக்கிழமை (11) பிற்பகல் நடைபெற்ற 10வது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டே இதை ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறந்த சேவையாற்றிய ஆசிரியர் விருது மற்றும் சிறந்த சேவையை ஆற்றிய சிறந்த பாடசாலை. பிராந்திய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களும் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டதுடன் 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் - ஜனாதிபதி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More