
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உலக குருதி கொடையாளர் தினத்தில் குருதி கொடையாளர்கள் கெளரவிப்பு
உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் ஏற்பாட்டில் இரத்த தானம் வழங்கியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் நடைபெற்றது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் அத்தியட்சகர் ஏ. எல். எப். ரஹ்மானின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் பொதுச் சுகாதாரம் மற்றும் திட்டமிடலுக்கு பொறுப்பான சிரேஷ்ட மருத்துவ அதிகாரி ஏ. எல். பாறூக் கலந்து கொண்டதுடன் குருதிக் கொடை ஏற்பாட்டாளர்கள் சார்பில் கெளரவ விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா, மருத்துவர்கள், தாதியர்கள், குருதிக் கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)