உயர் நீதிமன்ற 36 வழக்குகளில் முஸ்லிம் காங்கிரஸ் மனு திங்கள் கிழமை விசாரணை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உயர் நீதிமன்ற 36 வழக்குகளில் முஸ்லிம் காங்கிரஸ் மனு திங்கள் கிழமை விசாரணை

பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி 10ஆம் திகதி கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பைசல் முஹைதீன் ஆகியோர் வெள்ளிக்கிழமை உயர்நீதி மன்றத்திற்கு வந்திருந்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்திருக்கும் SC/SD/27 /2014. இலக்க மனு நாளை திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது அவர்கள் வாதாடவுள்ளனர்.

பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில், ஐவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் பிரஸ்தாப வழக்கு விசாரணை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட ஆபத்தான பல்வேறு விடயங்கள் அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த புதிய திருத்தச் சட்டத்தில் அடங்கியுள்ளதாக பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

உயர் நீதிமன்ற 36 வழக்குகளில் முஸ்லிம் காங்கிரஸ் மனு திங்கள் கிழமை விசாரணை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)