
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உணவுப் பழக்கம் தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு
முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் தேசிய அபிவிருத்தி வாரத்தையொட்டி காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரனின் வழிகாட்டலின் கீழ் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஜெஸ்மிரின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கு "பிள்ளைகளின் உணவுப் பழக்கமும், நாளாந்த செயல்பாடும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை (24) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் கலந்து கொண்டதோடு, காரைதீவு சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)