
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உகந்தையிலிருந்து சென்ற யாத்திரிகர்கள் கதிர்காமம் ஆலயத்தை சென்றடைந்தனர்
உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான பாத யாத்திரையை ஆரம்பித்த யாத்திரிகர்கள் 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து வெள்ளிக்கிழமை கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக யாழ்ப்பாணம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம், திருகோணமலையில் உள்ள ஆலயங்கள், வெருகலம்பதி முருகன் ஆலயம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், பாணமை ஊடாக உகந்தை முருகன் ஆலயம், அங்கிருந்து காட்டுவழியாக சுமார் 55 கிலோ மீற்றர் தூரம் ஆறுகள், குளங்களைக் கடந்து காட்டில் அமைந்துள்ள கபிலித்தை முருகன் மற்றும் வைரவர் ஆலயங்கள், செல்லக் கதிர்காமம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று தரிசித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் நடந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்குச் சென்று கொடியேற்றத்தில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது வழக்கம்.
இதனடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழிப் பாதை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 நாட்கள் நடைபயணமாக சென்று கதிர்காமத்தை அடைந்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)