இவ்வருடம் ஆர்வமற்ற தைப்பொங்கலா?

இம்முறை தைப்பொங்கலுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதில் யாழ்ப்பாண மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருநெல்வேலி சந்தைப் பகுதியில் வழமையாக பொங்கல் தினத்துக்கு முதல் நாள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவது வழமை.

ஆயினும் இம்முறை பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் அதிக நாட்டம் காட்டவில்லை.

யாழ்ப்பாணத்தில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கல் வியாபாரம் இடம்பெறவில்லை எனவும், தற்போது விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் இம்முறை பொங்கல் பொருள் கொள்வனவில் அதிக நாட்டம் காட்டவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலிப் பகுதியில் வழமையாக பொங்கல் தினத்துக்கு முதல்நாள் சன நெருக்கடி ஏற்படுவதன் காரணமாக நல்லூர் பிரதேச சபை இம்முறை அதனைத் தவிர்க்கும் வகையில் திருநெல்வேலி சந்தையின் முன் வீதியை ஒரு வழிப்பாதையாக அறிவித்திருந்தது. ஆனாலும்கூட பொதுமக்கள் தைப்பொங்கலுக்கான பொருட்கள்கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை.

இவ்வருடம் ஆர்வமற்ற தைப்பொங்கலா?

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More