இளம் குடுமபஸ்தரை வெட்டிப் படுகொலை செய்தவர் 11 மாதத்தின் பின்பு கைது

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் 11மாதங்களின் பின்னர் பொலிசாரால் இன்று (18-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இரவு இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நவம்பர் மாதம் 17ம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 11மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை இன்றைய தினம் விசேட குற்றத் தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் குடுமபஸ்தரை வெட்டிப் படுகொலை செய்தவர் 11 மாதத்தின் பின்பு கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More