இலங்கையில் பசி, பட்டினி - ஆட்சியின் கொடுமை - அகதிகளாக இந்தியாவை நோக்கி மக்கள் நகர்வு

இலங்கை நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் வட பகுதி மக்கள் மன்னார் பாக்குநீர் வழியாக இந்தியாவுக்கு தங்கள் குடும்பங்களுடன் அகதிகளாக இடம்பெயரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்து.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 19 பேர் அதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்ற இவ்வேளையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் படகு ஒன்றில் மன்னாரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) அதிகாலை தனுஷ்கோடி வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு போய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து மெரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் தற்போது, இலங்கை மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட மேலும் 10 பேர் மணல் தீடையில் இறங்கியுள்ளதாகவும், தீடையில் நின்றவர்களை தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் 10 பேரை மீட்டு கொண்டு போவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அகதிகளாகச் சென்ற இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பசி, பட்டினி - ஆட்சியின் கொடுமை - அகதிகளாக இந்தியாவை நோக்கி மக்கள் நகர்வு

வாஸ் கூஞ்ஞ

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More