
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
விபத்தின் போது சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பாக கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)