
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆடி அமாவாசை தினத்தன்று நன்கொடை
ஆடி அமாவாசை தினமான நேற்று வழக்கம்ப அம்மன் அறக்கட்டளை, பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா ஆன்மீக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இணைந்து 2 மாணவர்களுக்கான கல்விக்கான நிதி உதவி, 20 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் 2 பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் கோழிகள் உள்ளிட்ட கோழி கூண்டுகளுடன் கோழிகளுக்கான உணவுக்கான ஒரு தொகை பணம் என்பன வழங்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் திரு. ஈஸ்வரன் தனது அன்புத் தந்தையின் நினைவாக ரூபாய் 142,000 மற்றும் அமெரிக்காவில் நியூயார்க்கில் வசிக்கும் திரு குமரேசு ஜெகநாதன் தனது அன்பான தந்தையின் நினைவாக ரூபாய் 30,000 நன்கொடையாக வழங்கினர். அந்த நிதியிலேயே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)