
posted 30th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெட்ரா செந்தில் தொண்டமான்
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆசி பெற்றார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வணக்கத்துக்குரிய தேரருக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அஸ்கிரிய பீடத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர் இதன் போது நினைவு கூர்ந்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)