
posted 30th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அல் மிஸ்பாஹ் வித்தியாலய அணி தேசிய மட்டத்துக்கு தெரிவானது
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய பட்மிண்டன் அணியினர் தேசிய மட்டத்துக்கு தெரிவாகினர்.
கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் திருகோணமலை மெக்கெய்ஸர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பட்மிண்டன் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலையின் 16 வயது ஆண்கள் அணியினர் சிறப்பான முறையில் தமது திறமைகளை வெளிக்காட்டி, இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)