
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
'அறகலய'வின் சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவரே பகிரங்கப்படுத்தும் நாமல்
அறகலயவை தோற்றுவித்தவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர் என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மயூராபதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'சிஸ்டம் சேஞ்ச்' என்ற முறைமை மாற்றத்தைக் கோரிப் போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள். அறகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.
அவரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவரும் அறகலயவை தோற்றுவித்த சூத்திரதாரிகளில் ஒருவர் எனவே நிரூபணமாகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காக செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள் இன்னமும் இருக்கின்றன என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)