அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் வருவார்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள்

அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (23.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்;

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் குறித்த கூற்றை ஏற்று தற்போது அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளனர். ஈ.பி.டி.பியினராகிய நாம் முன்னெடுத்தவரும் கோட்பாட்டையொத்த இவர்களது இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்கள் அபிவிருத்தி தொடர்பில் எடுத்த இந்த நிலைப்பாடு போன்று அரசியல் தீர்வு விடயத்திலும் எடுக்க வேண்டும்.

ஏனெனில் நாம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் காலடியெடுத்து வைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து மக்களின் அவசிய தேவைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக படிப்டியாக அரசியல் உரிமை குறித்து முன்னேற முடியும் என்றும் வலியுறுத்தி வந்திருந்திருக்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை. அரசியல் உரிமை கிடைத்தால் அபிவிருத்திகள் கிடைத்துவிடும் எனவும் தமிழ் மக்களுக்கு தற்போது அரசியல் உரிமை தான் வேண்டுமே தவிர அபிவிருத்திகள் அல்ல எனவும் ஊர் ஊராக முழக்கிமிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது அன்றாட பிரச்சினை அபிவிருத்தி அரசியல் உரிமைக்கான தீர்வு என்ற ஜனார்த்தமான வழிமுறை செயற்பாடுகளுக்கும் அதனூடான எமது அரசியல் வழிமுறைக்கும் சேறுபூசி விமர்சித்து வந்திருந்தனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

இதேபோன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாதென்று கைவிடப்படும் நிலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கைத் தீவை ஜனாதிபதி ரணில் பொறுப்பெடுத்ததையும் தமிழ் தேசிய கட்சிகள் பல்வேறு கருத்துகளை நலினமாக சொல்லி விமர்சித்து வந்திருந்தனர். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்டளிட்ட பலரால் ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் உறுப்பினராக வந்தவர் என்றும் இவர் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் இவரால் ஒன்றும் செய்துவிட முடியாதென்றும் பல்வேறு கருத்துக்களை சொல்லி விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் இலங்கை அரசியல் சாசனப்படி அவரது தெரிவு முறைமை சரியானதாகவே இருக்கின்றது. ஆனால் இதை நன்கு தெரிந்திருந்தும் ஜனாதிபதி ரணிலின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு வேண்டும் எனவும் அதை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டு விடயத்திலே ஜனாதிபதி
மிக தெளிவாக ஒன்றைச் சொல்லி இருக்கின்றார்.

அதாவது நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் சேர்ந்து இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினகளான சிவஞானம் ஸ்ரீதரன், சித்தார்த்தன் போன்றோரும் அதேபோன்று வன்னிப் பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட இன்னும் சிலரும் ஜனாதிபதியின் கருத்தை எற்று அவருடன் இணைந்து பயணிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது போன்ற நிலைப்பாட்டுடன் நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர்.

தங்களுடைய கூட்டுக்குள் இருக்கின்ற குழப்பங்களால் மக்களால் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் எவ்வாறெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தார்களோ அந்த ஜனாதிபதியிடம் சென்று நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுடன் தாமும் இணைந்து செயற்பட தமக்கும் அபிவிருத்திக்கான பங்கை தருமாறு கோரி பெற்றிருப்பது வரவேற்கக் கூடிய விடயமாக இருந்தாலும் அரசியல் தீர்வு விடயத்திலும் எம்மைப் போன்ற அவர்கள் தெளிவாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் வருவார்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More