அரசாங்கத்துக்கு எதிரான பணிப் பகிஷ்கரிப்பு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அரசாங்கத்துக்கு எதிரான பணிப் பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய (15) புதன் தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் புதியவரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி இந்த பணிப் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் சேவைகள் இடம்பெறவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில்

இலங்கையில்நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டன. முல்லைத்தீவு மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்கின. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேவேளை, பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவான அளவில் காணப்பட்டது.

வங்கி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக வங்கிச் சேவைகள் இடம்பெறவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான பணிப் பகிஷ்கரிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)