அரச  ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

அரச ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் கூடிய அங்கவத்தர்களைக் கொண்டு சிறந்த முறையில் இயங்கிவரும் சங்கமாகிய மன்னார் மாவட்டத்தில் அரச ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (16) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச ஓய்வூதியம் பெறுவோர் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இச் சங்கத்தின் தலைவர் எஸ். சூசைதாசன் தலைமையில் இவ்வருடாந்த கூட்டம் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 827 ஓய்வூதியம் பெறுவோர் இச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 535 ஓய்வூதியம் பெறுவோரும் , நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 197 நபர்களும் . முசலி பிரதேச செயலகப் பிரிவில் 21 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 43 நபர்களும் மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவில் 31 பேரும் மொத்தம் 827 ஓய்வூதியம் பெறுவோர் இச் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அரச  ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)