அம்பாறை மாவட்டத்தில் திடீரென இடியுடன் கூடிய பெருமழை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடந்த பல வாரகாலமாகக் கொடும் வரட்சி நிலவிய அம்பாறை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் இடி, முழக்கத்துடன் கூடிய பெருமழை பெய்தது. இன்று மாலை திடீரெனப் பெய்யத் தொடங்கிய பெருமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்தது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ளுர் வீதிகள் மழை நீர் நிறைந்து காணப்படுவதுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

எனினும், கொடும் வரட்சியாலும், உஷ்ணத்தினாலும் அவதியுற்று வந்த மக்கள் மழை பொழிந்தமையால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைக்கு இப்பெருமழை பெரும் வரப்பிரசாதமானதென விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் திடீரென இடியுடன் கூடிய பெருமழை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY