அம்பலவாணர் சிவபாலசுந்தரன்  ஓய்வு பெற்றார்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஓய்வு பெற்றார்

யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்றுடன் (06) ஓய்வு பெற்றார். அவருக்கு, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து தமிழரின் பாரம்பரிய தமிழ் கலை வடிவங்களுடன் வரவேற்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடமையை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வு நடந்தது.

இதைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் நடந்தன. இதன்போது யாழ். மாவட்ட செயலரின் நினைவுகளை தாங்கிய “அருமருந்தென்ன “என்ற தலைப்பிலான இறுவட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வெளியிடப்பட்டது.

யாழ். மாவட்ட செயலராக கடந்த 2023 ஜனவரியில், தனது கடமைகளை பொறுப்பேற்ற மாவட்ட செயலர் 1992 டிசெம்பரில் அரச சேவையில் இணைந்து கொண்டார். 1995ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரியாவிடை நிகழ்வில், யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், அவரது குடும்பத்தினர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பலவாணர் சிவபாலசுந்தரன்  ஓய்வு பெற்றார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)