
posted 29th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அமைச்சு பதவியை துறந்தார் விஜயதாஸ
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாஸ ராஜபக்ஷ தனது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு பதவியிலிருந்து விலகினார்.
இன்று (29) திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தனது பதவி விலகல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்னரே அமைச்சு பதவியிலிருந்து தான் விலகினார் என்றும் தெரிவித்தார்.
விஜயதாஸ ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை சிறீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக அறிவித்திருந்தார். எனினும், அந்தக் கட்சியில் நீடிக்கும் குழப்பங்களால் அந்தக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)