அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திய நபர் கைது

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திய நபர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு மாகாண சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதம செயலர் பணிமனையில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், மருத்துவர்களின் பங்கேற்புடன் நேற்று (17) புதன் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அநாமதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பினார். அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கவே, வெளியேற மறுத்த அவர் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

கூட்டம் நிறைவில் சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து சத்தமிட்டவாறே ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலர் பணிமனையில் முரண்பாட்டில் ஈடுபட்டார். அதிகாரிகள் வெளியேறக் கூறியும் முரண்பாட்டில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை தடுத்துவைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திய நபர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News