
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
மணல் அகழ்விற்க்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு நேற்று 05.07.2024 கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாகா கல்லாறு பகுதியில் அனுமதி பாத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் போலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடையப் பொருட்கள் எதிர்வரும் பத்தாம் திகதி 10 கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபும் போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)