அதிபர்களின் சம்பள நிவர்த்தி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அதிபர்களின் சம்பள நிவர்த்தி

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை தொழில் முனைவோர் தோட்டக்கலை நிகழ்ச்சித் திட்டத்தின் விவசாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சு, மாகாண கல்வி, விவசாயம் மற்றும் சுகாதார அமைச்சு, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஆதரவுடன் வடமாகாணத்தில் 150 பாடசாலைகளை இலக்கு வைத்து தொழில் முனைவோர் பாடசாலை தோட்டக்கலை ஆரம்பிக்கப்பட்டது.

தொழில் முனைவோர் பாடசாலை தோட்டக்கலை வெற்றியடைந்துள்ளதுடன் முயற்சிகள் அமைச்சர் தலைமையில் மல்லாவி மத்திய கல்லூரியை மையமாக கொண்டு ஆரம்பமாகி நாளை நிறைவடையவுள்ளது. விவசாய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான புதிய தொழில் நுட்ப அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.

இக்கண்காட்சியை பத்தாயிரம் பள்ளி மாணவர்கள் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்யும் முகமாக 87 பாடசாலைகளுக்கு 150000 ரூபா காசோலைகள் அமைச்சர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கன் திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதிபர்களின் சம்பள நிவர்த்தி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More