posted 10th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- குடித்துக் கொண்டிருக்கும் சிபீ, சுற்றாடலை விளங்கிக் கொள்ளாமல் தன்னையே வதைத்துக் கொண்டிருப்பது ஏன்?
- வாழ்க்கையில் நட்பு என்பது காலத்தின் நீளத்தில் இல்லை. ஒரு செக்கன் காணும் ஒருவரை அளந்து விடுவதற்கு. சிபீக்கு அதில் பரிட்சாத்தியம் இல்லை.
- உழைத்துப் பார்த்தால்தான் உள்ளங்கையின் வலி தெரியும்.
- இன்னமுமா சம்யூத்தாவின் குடும்பத்தினையும், மாமன் குடும்பத்தினையும், தமிழின் குடும்பத்தினையும் சிபீயால் புரிந்து கொள்ள முடியவில்லை.
- சொத்தினைக் காப்பாற்ற சிபீ என்ன முயற்சி செய்கின்றான்? ஒன்றுமில்லையே! ஏனென்றால், இந்த சொத்தில் எவ்வளவு சிபீ உழைத்திருக்கின்றான்?
- கல்யாணம் ஒன்றுதான் எங்களது உரிமை என்று சொல்வதற்கு சிபீ, நீ, உழைத்து சொத்துச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நீ ஒன்றும் உழைக்கவில்லையே! அப்போ கல்யாண உரிமையும் ஜனாம்மாவிற்குத்தான் உண்டு, ஏன் மீனாவிற்குக் கூட இல்லே.
- மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டாலும் சிபீ, தமிழுக்குச் செய்த துரோகம் மன்னிக்கப்பட மாட்டாது.
- சொத்தினை அடைவதற்கு கழுகு மாதிரி சுற்றித் திரியும் சம்யூத்தாவும், அவள் குடும்பமும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 10.11.2025
இடையிடையில் சிபீயின் உள்ளுணர்வு, அதாவது, தெய்வத்தின் காவல் அவனைக் காப்பாற்றுகின்றது போலும். அதாவது, தமிழைக் கண்டதும் ஏன் தமிழ் நெடுகவும் வேலை செய்கின்றாள் என்று தன்னகத்தே கூட்டிச் சென்று மேடையில் நிற்பாட்டிய சிபீ. பிறகு ஏனோ உடைந்து போகின்றான். அவனின் மனச் சாட்சியானது, தமிழுக்கு தான் செய்த துரோகங்கள் முன்னிற்கு நிற்கின்றன. அதனால், இவை சிபீயை ஒன்றும் தானாக சிந்திக்க விடுவதாக இல்லை.
சிபீ்க்குத் தெரியும் இந்தக் கல்யாணம் ஒரு சும்மா நடைபெறும் நிகழ்வென்று. தனது நீண்ட கால நண்பியான சம்யூத்தாவை றொம்ப நம்புகின்றான். ஆனால், அவளும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றாள் என்று புரிந்து கொள்ளாத அளவிற்கு மதுபானத்தினைக் கொடுத்து மதி இழக்க வைத்திருக்கின்றார்கள். இந்த விஷயத்தில் கூட அவனது பக்கமாக இருக்கும் கேடீ, சேது எங்கே போய் விட்டனர்? சிபீயை யாரும் குடிக்க வைக்கின்றார்களா? அல்லது சிபீயே தானே குடிக்கின்றானா? தெரியவில்லை, ஏன் என்று புரியவுமில்லை.
தமிழையும், சிபீயையும் அந்த அறைக்கு வரச் சொன்னது யாரு? ஜனாம்மா என்றால், ஜனாம்மா எங்கே? அப்போது ஜனாம்மா அந்த அறையினுள் இல்லை என்றால், ஜனாம்மா இவர்களிருவரையும் வரச் சொல்லவில்லை என்றுதான் விளங்குகின்றது.
அப்போ யாரோ திட்டம் போட்டுத்தான் வரச் சொல்லி இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழையும், சிபீயையும் போட்டோ பிடித்தது யாரு? அதனை எல்லோருக்கும் அனுப்பியது யாரு? இதனைச் செய்தது கணேஷனா? அல்லது மாறனா? அல்லது வெற்றியா? அல்லது பிறேமா?
இது நல்ல நோக்கத்தோடே செய்யப்பட்டிருந்தால், அது மாறனாவோ அல்லது வெற்றியாவோ இருக்க முடியாது. ஏனென்றால் இது தமிழது charcterஓடே சம்பந்தமாகின்றது. மாறாக, கணேஷன் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அதாவது, தமிழை ஒரு கூடாதவள் என்ற மற்றவர்களுக்குக் காட்டி வந்த அனைவரின் முன்னாலும் தமிழை மரியாதையினப் படுத்தி வெளியே துரத்தி விட ஒரு முயற்சியாகவும் இருக்கலாம்.
அடுத்தது, பிறேமாகவும் இருக்கலாம். இதற்கு, கணேஷனின் காரணத்தோடு இவனின் காரணமும் ஒன்றாக அமைவதாகவும் இருக்கின்றது.
இவர்கள் இல்லை என்றால், தமிழின் நல்ல காரியத்திற்கென்றால், வெற்றி அல்லது மாறனாவகவும் இருக்கலாம். தாங்கள் செய்த கல்யாணம் மாதிரி, விரும்பிய வாழ்க்கையின் அமைத்துக் கொள்வதற்கு, இவர்களை சேர்த்து வைப்பதற்காக இந்த முறட்டு வழியினைக் கையாண்டிருக்கலாம்.
இல்லாவிட்டால், கணேஷனோ, பிறேமோவால் கூடாத நோக்கத்தோடே செய்யப்பட்ட இந்தக் காரியத்தினை வெற்றி தனக்குச் சாதகமாகப் பயண்படுத்தி இருக்கலாமல்லவா?
இன்று இது கடைசி இரவு சிபீ்க்கு, தனது வாழ்க்கையினை நல்ல முறையில் முடிவெடுப்பதற்கு. சரி, தமிழுக்குத் துரோகம் செய்து விட்டால், தமிழின் முன்னால் நீ அழுதது காணும். அவளின் காலிலாவது விழுந்து பார். கௌரவத்தினைப் பார்க்காதே! விழுந்து விடு. தமிழ் இரங்காமலா விடுவாள். நீ அழுததைக் கூட அவளால் தாங்க முடியவில்லையே. அப்பவும் அவள் அழாதேயுங்க சார், என்று சிபீ்க்கு ஆறுதல் சொல்லுகின்றாள். இன்னம் கொஞ்சம் என்றால் தமிழ் அவளும் அழுதுவிடுவாள். அது சிபீக்குப் புரியவில்லையே! அத்துடன், அவளின் கண்களில் உள்ள காதல் சிபீ்க்குத் தெரியவில்லையா?
இத்தனைக்கும், சம்யூத்தாவின் கண்களில் காதல் தெரிகின்றதா? எப்பனும் இல்லை. அது கூட சிபீ்க்கு விளங்கவில்லை. யோசி்க்கும் நிலையில் சிபீ இப்போது இல்லையே. ஒரு மயக்க நிலையினில் அல்லவா இருக்கின்றான்.
இதற்கு, சம்யூத்தாவின் குடும்பத்தினதும், கணேஷின் குள்ளத் தனத்தினையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இதில், தமிழின் தகப்பனின் கதை உள்ளிட்டால், அதனை நிரூபிப்தற்கு மாறனும், வீராவும் பொய் சாட்சி சொன்னவனைக் கொண்டு வர வேண்டும். அத்துடன், கணேஷனுக்கும், குறிஞ்சிநாதனுக்குமுள்ள உள்ளான தொடர்புகள் தமிழினால் வெளிவர வேண்டும். அது மட்டுமல்லாமல், வெற்றியின் மனைவி துளசியின் வருகையால் இங்கு சிலசமயம் சம்யூத்தாவின் குடும்பத்தின் குளறு படிகள் வெளியே தெரிய வரலாம்.
பலவிதமான ஊகங்கள் – மாறன் சொன்னது போன்று இது ஒரு இடியப்பச் சிக்கலிலும் சிக்கலான ஒன்று. இந்தச் சிக்கல் சுலபமாகத் தீரும்.
கையைக் கும்பிட்டு, சிபீயின் மேலே தான் வைத்த காதலானது உண்மை என்று அந்த அம்மாளினைச் சாட்சியாக வைத்து பூக்குளியினுள் இறங்கினாளே தமிழ், அவளை அந்த அம்மன் கை விட்டு விடுவாளா? பார்த்திருவோம், சூழ்ச்சியா, தெய்வமா என்று?
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!