posted 5th March 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- ஜனாம்மாவின் பிறந்த நாளானது வீட்டினிலே தமிழின் ஒழுங்குபடுத்தலினாலும், ஒருமைப்படுத்தலினாலும் இனிதே நடைபெற்றது.
- தமிழின் பரிசின் பெறுமதியினை உணராமல், அதனை விளங்காமல் எடுத்தவுடன் வாயினை கொடுத்தவர் அனைவரும் வாயடைத்துப் போயிருந்தனர்.
- ஜனாம்மா பரிசுக்களை வாங்குகையில், ஒவ்வொருவரும் சொன்னது தங்களது நினைவாக வைத்திருங்கள் என்று. ஆம் என்று வாங்கிய பரிசுக்களை ஜனாம்மா அங்கு வைத்து விட்டா. தமிழின் பரிசானது விலை கம்மியாக இருந்திருக்கலாம், ஆனால், அதனை ஜனாம்மா தன் நெஞ்சில் வைத்து அணைத்துக் கொண்டா.
- அம்முவைக் கலைப்பதற்காக கணேஷன் எடுத்த முயற்சிகளெல்லாம் தகடுபொடியாக்கப்பட்டன, தமிழால்.
- ஒருவரும் பிரகாஷில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழின் உத்வேகத்தினால் பிரகாஷ் காப்பாற்றப் பட்டார்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 23 - 26.02.2026
ஆனால், கணேஷனுக்கோ அம்முவை எப்படியாவது கொம்பனியை விட்டுக் கலைத்து விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இங்கு ஜனாம்மாவின் சொத்தினை அமுக்கி விடுவதற்கான திட்டத்துடனேதான் உள்ளே வந்துள்ளா இந்த அம்மு என்று விஷத்தினை தொடர்ந்து எல்லார் முன்னிலையிலும் கக்கிக் கொண்டிருக்கின்றான்.
பிரகாஷினைக் கொலை செய்ய முயற்சி செய்து இப்போது வரைக்கும் படுத்த படுக்கையிலே இருக்க வைத்திருப்பதுமல்லாமல், எல்லார் முன்னிலையிலேயும் தான் மிகவும் நல்லவன் என்று கெப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றான், கணேஷன். இப்படியாக 20வருஷமாக தனது வாழ்க்கையினை நிதானமாக கணேஷன் ஓட்டிக் கொண்டிருக்கின்றான். இதில் குற்றவாளியாக இருப்பது அம்முவின் கணவன், தமிழின் அப்பா, செல்வரத்தினம்தான்.
இதனைக் கண்டு பிடிக்க எந்தவிதமான முயற்சிகளும் இந்த 20 வருட காலத்தில் ஜனாம்மா எடுக்காமல், கணேஷன் சொன்ன வார்த்தையினை வைத்துக் கொண்டு, அன்று வைத்தியசாலையில் எடுத்த முடிவினை இப்ப மட்டும் அழுங்குப் பிடியாக பிடித்த வண்ணம் ஜனாம்மா இருக்கின்றா.
இதிலிருந்து தெரிகின்றது ஜனாம்மா உண்மையாக மகனில் அன்புடனும், அக்கறையிலும் இருக்கின்றாவா என்று? அல்லது சொந்தம் என்பதற்கு கூடுதலான ஆதரவு தெரிவிக்கின்றாவா? வேலைக்கு வந்தவன், கூலிக்குத்தானே வந்தவன் என்பதுவும், றைவர் என்றால் செல்வரத்தினத்தை மகனாகப் பார்த்தேனே என்று, அன்று கோவிலிலே வைத்து ஜனாம்மா சொன்னது எல்லாம் பொய்யாக அல்லவா இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், செல்வரத்தினம் அம்முவை திருட்டுக் கல்யாணம் பண்ணி விட்டார் என்றதனால் ஜனாம்மாவிற்குக் கோபம் இருக்கலாம். அதற்காக கொலைப் பழியினைச் சூட்டினால் ஜனாம்மா நம்பிவிடலாமா? இத்தனை வருஷ காலமாக றைவராக இருந்த செல்வரத்தினத்திற்கு இப்படிப் பண ஆசை, சொத்தின் மேல் பேராசை இருந்திருந்ததா என்று கூடவா ஜனாம்மாவால் அளந்திருக்க முடியாது? அது மட்டுமா, யாரையும் கொலை செய்யும் அளவிற்கு செல்வரத்தினத்தின் செய்கைகள் இருந்திருக்குமா? அப்படியான சரித்திரப் பட்டியலே இல்லையே செல்வரத்தினத்தின் மேலே.
அப்படி செல்வரத்தினத்தினை அளக்க முடியாத ஜனாம்மா, என்னென்று தனது கொம்பனியில் வேலை செய்பவர்களை அளந்திருப்பா? கொம்பனியில் ஒரு பைசா எங்கு போகின்றது? வருகின்றது? என்றெல்லாம் தனக்குத் தெரியாமலா தான் இருக்கின்றேன் என்று ஜனாம்மா தமிழ் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலினை இங்கு குறிப்பிட அவசியமாகின்றது. அதெல்லாம் விட்டு விடு என்று தமிழிடம் சொன்னது, கணேஷனின் குள்ளத்தினத்தினை மூடி மறைப்பது போலல்லவா இருக்கின்றது.
இப்படியான குணம் படைத்தவன், செல்வரத்தினத்தின் மேலே அபாண்டமான பொய்யினைச் சொல்கையிலே ஜனாம்மாவால் ஏன் சுதாகரிக்க முடியவில்லை. சரி, அன்றுதான் தனது மகள் ஜெயறானியைக் கள்ளமாகக் கல்யாணம் பண்ணி விட்டதனால் ஏற்பட்ட கோபத்திலும், கௌரவப் பிரச்சினையிலும் தடுமாறிய நிலையினை விட்டு, பின்பாவது இதைப்பற்றி கொஞ்சம் அலசிப் பார்த்திருக்கலாமல்லவா? அப்படிச் செய்யவில்லையே!
அதுமட்டுமல்லாமல், மீனா, ஜெயறானியை தங்களது கொம்பனியில் வேலைக்குத் தமிழ் சேர்த்து விட்டாள் என்று கடித்துக் குதறுகின்றாவே, இவ தன்னும் தனது கணவனுக்கு இப்படி நடந்து விட்டதே, தனது அண்ணன் கணேஷன்தான் இவ்வளவு வருஷங்களாக ஒரு டொக்டரையே வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றாரே, தான் வேறொரு டாக்டரிடம் இரண்டாவது அபிப்பராயத்தினைக் கேட்டுப் பார்ப்போமே என்று மீனாவால் ஏன் சிந்திக்க முடியவில்லை. சிந்திக்கவுமில்லை.
தனது தமையன் கணேஷன் சொல்கின்றான் என்றால் கைலாயம் போய் விடுவாவா மீனா. இல்லைதானே. அதற்கு மட்டும் நியாயம் கேட்பா அல்லவா? தமிழ் மருகள், அவள் யாரோ பெத்த பிள்ளைதானே என்றதனால், அவளைக் கரைத்துக் குடிப்பதில் என்னதான் நியாயம் இருக்கின்றது?
அம்முவைத் தொழிற்சாலையில் வேலைக்காகத் தமிழ் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், பிரகாஷ் மாமாவின் புத்திமதியின் படியேதான். அவரின் நோக்கமும், தமிழின் நோக்கமும் எல்லாரையும் ஒன்றாக, ஒரே குடும்பமாகச் சேர்ப்பதுதான். ஆனால், ஜனாம்மாவிற்கு அம்முவை வேலைக்குச் சேர்த்தது மிகவும் மனதினைத் தாக்கி உள்ளது போலும். தமிழின் அத்தை மீனாவும் தமிழுடன் கோபமாக இருக்கையிலே, ஜனாம்மாவும் தமிழுடன் அந்நியோன்யமாக இருப்பதானது குறைந்து விட்டது. இதற்குக் காரணம், தமிழில் கோபம் என்றில்லை, மாறாக, ஜனாம்மாவிற்கு ஜெயறானியை வேலைக்குத் தமிழ் எடுத்ததினால் ஏற்பட்ட மன அழுத்தம்தான்.
இதனை ஜனாம்மா தனிமையாக இருந்து சாப்பிடுகையிலே முத்தம்மாவிடம், ஜனாம்மா தமிழைக் கூடக் கேட்கவில்லை. அதுமட்டுமா, முத்தம்மாதான் ஜனாம்மாவை முதன்முதலில் பிறந்த நாள் வாழ்த்தினைச் சொன்னவவாச்சே. இரண்டாவது தமிழ் சொன்னா. ஆனால், முத்தம்மாவுடன் கதைத்தது போல, தமிழை அவ்வளவிற்கு வர வேற்கவில்லை, ஜனாம்மா. இதெல்லாம் தமிழுக்கு விழங்காதா என்ன? அதனை முத்தம்மா விளங்கிக் கொண்டாலும், தமிழையும், நீ விளங்கிக் கொள்ளு தமிழு என்று முத்தம்மா தட்டிக் கொடுத்தா.
ஆனால், பிரகாஷோ தமிழுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றார். எல்லாம் சரிவரும் என்று கூறியதினை வைத்து தமிழ் மிகவும் ஆறுதலாகவும், தைரியமாகவும் இருக்கின்றா.
ஜனாம்மாவின் பிறந்த நாளினைக் கொண்டாடுவதற்காக தமிழ் எல்லா ஆயத்தங்களையும் செய்கின்றாள். ஆனால், இதனை சிபீ செய்தால் ஜனாம்மா மிகவும் சந்தோஷம் அடைவா என்று தமிழ் நினைத்துச் சொன்னாலும், சிபீ ஒருநாள் பயணத்தில் போக எத்தனிக்கையிலே, இரவிற்கு ஜனாம்மாவின் பிறந்த நாள் விருந்திற்கு வந்து விடுவானா? ஆனால், தமிழோ வரச் சொல்லி இருக்கின்றாள் சிபீயை.
வர்ஷினியோ தனது நண்பிகளுடன் விடுமுறையினை கழிப்பதற்காக பங்களூர்க்குப் போயுள்ளாள். ஆனாலோ தமிழ் ஜனாம்மாவின் பிறந்தநாளுக்கு அறிவித்தா. ஆனால், வர்ஷினியோ என்னென்று உடனே வாறதென்று மறுத்துவிட்டாள். இப்படியாக வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தமிழை உதாசீனப் படுத்தி விட்டார்கள்.
ஜெயறானியை ஆசை ஆசையாகப் பார்ப்பதற்கு தொழிற்சாலைக்குச் சென்றான் சிபீ. ஆனால், உண்மையாக அதுவல்ல. அவவைப் பழிவாங்குவதற்காகவே சிபீ சென்றான். இதனை வர்ஷினியிடம் சொன்னான் சிபீ. ஆனால், சிபீயை நன்கு புரிந்தவளாய்த் தமிழ் தனது தாயிடம் சிபீயுடன் மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரித்தாள். ஏனென்றால், சிபீயின் குணமே வேற என்றும் கூறி வைத்தாள். சிபீ எந்த நேரம் எப்படிக் கதைப்பான் என்று ஒருவருக்கும் தெரியாது. அமைதியாக இருக்கும்படி முன்னெச்சரிகையாத் தமிழ் சொல்லி வைத்தாள் தனது தாயிடம்.
ஜெயறாணியைத் தேடி அலைந்து கொண்டு திரிகின்றான் கணேஷன். எப்படியாவது அவவில் ஏதாவது ஒரு குற்றத்தினைப் பொருத்தி, அவவை இந்த கொம்பனியிலிருந்து கலைத்து விட வேண்டும் என்பதுதான் அவனின் நோக்கமே. ஏனென்றால், ஜனாம்மாவின் இளவரசியாக இருந்தவதான் ஜெயறானி. ஆனால், ஜெயறாணி செய்த குற்றத்தினை, துரோகத்தினை மறக்கமுடியாமல் ஒரேயடியாக ஜனாம்மா தனது மகள் ஜெயறாணியை வெறுத்தொதுக்கினா.
ஜனாம்மாவின் மனம் மாறிவிடக் கூடாது என்பதனை அடிக்கடி உறுதி செய்து கொண்டிருக்கும் கணேஷன். எப்பப்போதெல்லாம் செல்வரத்தினம்தான் பிரகாஷைக் கொல்ல முயற்சித்தவன் என்ற பழியினை புதிப்பித்துக் கொண்டிருந்தான்.
தனது றைவரை வைத்து ஜெயறாணியின் வீட்டு விலாசத்தினை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்கு வந்த கணேஷனும், அவனின் றைவரும், அங்கு ஜெயறாணி இல்லாததினால், சந்தோஷத்தில் நல்ல விஷயம் ஜெயறாணியைப் பற்றி கிடைத்து விட்டது என்று ஜனாம்மாவைக் கூட்டிச் சென்றான் கணேஷன்.
ஆனால், ஜெயறாணி வீடு என்று ஜெயறாணி கொடுத்த தகவல் பிழை என்று கணேஷன் நிரூபித்தி, ஜெயறாணி பொய்யானவள் என்று உறிதிப்படுத்தி அவவைத் தமிழை வைத்தே உடனே கொம்பனியை விட்டு வெளியே துரத்தி விட வேண்டும் என்று மிகச் சந்தோஷத்தில் ஜனாம்மாவையும், தமிழையும் தான் முதல் றைவருடன் வந்து பார்த்த வீட்டிற்கே அழைத்துச் சென்றான். ஆனால், அங்கு ஜெயறாணிதான் இருந்தா. வீட்டினுள்ளேயும் அனைவரும் பார்த்தார்கள். எல்லாம் ஜெயறாணியின் குடும்பத்தின் அடையாளங்கள்தான் இருந்தன. ஏமாற்றத்தில் புலம்பிய வண்ணமாக கணேஷன் வீடு திரும்பனான், அனைவருடனும்.
ஜனாம்மா, வீட்டிற்கு ஜெயறானியின் வீட்டைப் பார்த்து விட்டு வந்த பின்பு, தனது கொம்பனியில் வேலை பார்த்தவன் பொய் சொல்லி ஜனாம்மாவை ஏமாற்றி பணம் வாங்கினான் என்ற தப்பிற்காக அவனைப் பொலிஸில் பிடுத்துக் கொடுத்ததும், அதைவிட முக்கியமானது ஜனாம்மாவிற்குத் துரோகம் செய்தாலோ அல்லது பொய்யினைச் சொன்னாலோ அவவுக்குப் பிடிக்காது என்பதனைத் தமிழ் கேட்டதும் பயந்து போனாள்.
ஜனாம்மாவின் பிறந்த நாளன்று வீட்டிலுள்ள அனைவரும் பங்கேற்றார்கள். அனைவரும் பரிசுகளும் கொடுத்தார்கள். அவையெல்லாம் விலை உயர்ந்தவை. ஆனால், தமிழ் கொடுத்ததோ ஒரு சிமிக்கி. அதுவும் ஒற்றைச் சிமிக்கி. இது என்ன ஒரு விலையில்லாததொன்று என்று கணேஷனும், அவன் சம்சாரம் அமுதாவும் பகிடி பண்ணினார்கள். அவளது வறுமையினை சுட்டிக் காட்டினார்கள்.
ஆனால், அந்த சிமிக்கியின் மகத்துவத்தினை தமிழ் விளக்கினாள். ஜனாம்மாவின் தகப்பன் வாங்கிக் கொடுத்த அந்த சிமிக்கியில் ஒன்று எப்பவோ தொலைந்து விட்டது. அதனை ஜனாம்மாவால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எத்தனை கோடியும் தருகின்றேன் என்று கேட்டும் அது ஜனாம்மாவிற்குக் கிடைக்கவில்லை. அதைத்தான், தமிழ் இப்போ பரிசாகக் கொடுத்தாள். இதுதான் ஜனாம்மாவின் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிக் கொடுத்தது. இதுதான், ஜனாம்மா, தாத்தா தந்த சிமிக்கி, இதுதான் அசல் என்று சொல்லி எல்லோரையும் அசைத்து வி்ட்டாள். அனைவரின் மூச்சும் ஒருகணம் நின்று விட்டதென்றால் பாருங்களேன்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!