posted 2nd November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இன்றைய சீரியலில் பகுதியில் சம்யூத்தாவின் வாழ்க்கை பிரச்சனையாக உள்ளது. சிபீக்கு சம்யூத்தா துரோகம் செய்யவில்லை. ஆனால், சிபீக்கு அவள் உண்மையாக இருக்கவில்லை. அத்துடன், தமிழைப் பழி வாங்க சிபீயைப் பயன்படுத்தியுள்ளாள்.
- இதுமட்டுமல்லாமல், சிபீக்கும் யாருக்கும் கல்யாணம் நடக்கப் போகின்றது என்பதுதான். இதில் ஜனாம்மாவின் பங்கு என்ன?
- சிபீ, தமிழுக்குச் செய்தது துரோகம். அவன் தெரிந்து செய்தானோ? தெரியாமல் செய்தானோ? ஆனால், துரோகம் செய்து விட்டான் என்பதுதான் உண்மை. மன்னிக்கவும் மாட்டாள், மறக்கவும் மாட்டாள், தமிழ்.
- செய்யப்பட்ட துரோகம் சிபீயை தமிழிடம் நெருங்க விடாது. ஆனால், சிபீ நெருங்குவான் என்பதுதான் எனது ஊகம். விரிசலாக இருக்கப் போகும் இவர்களின் வாழ்க்கை.
- எப்படி, சம்யூத்தாவின் குடும்பம் திட்டமிட்டு தமிழையும், குடும்பத்தையும் பழி வாங்கினார்களோ, அதே மாதிரி சம்யூத்தாவின் குடும்பமும் பழி வாங்கப்படும். இதுதான் சிபீ – ஜனாம்மா இவர்களின் திட்டமே!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 31.10.2025
சம்யூத்தாவையும், அவளின் குடும்பத்தையும் ஏற்கனவே ஜனாம்மா அளந்து விட்டா, அறிந்தும் விட்டா. இதில் சிபீக்கு தமிழைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், ஜனாம்மாவிற்கு அவசியம் இருந்தது. ஏனென்றால், அவளின் நடவடிக்கைகள் தனது குடும்பத்துடன் ஒத்து வராத்தும், சிபீ அவளைத் தன் நண்பி என்றும் வீட்டில் வைத்திருப்பதும் ஜனாம்மாவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால், சம்யூத்தாவுடன் சேர்ந்து தமிழைப் பழி வாங்க சிபீ துடித்ததும், இல்லை சிபீயைத் தூண்டி விட்டதும் சம்யூத்தாதான்.
சிபீ ஏன் தமிழைப் பழி வாங்க வேண்டும்? தமிழுக்கும், சிபீ்க்கும் என்ன தொடர்பு? ஒன்றும் இல்லேயே! ஆனால், சம்யூத்தாவுக்கும், தமிழுக்கும் தொடர்பு உண்டு. ஆனால், தமிழை ஏன் பிறேம் பழிவாங்க வேண்டும்? ஆனால், பழிவாங்கப்பட்டாள், தமிழ். இதற்கு தமிழின் கல்யாணத்திற்கு முன்பு தமிழின் குடும்பத்தினை பிறேமின் குடும்பம் நெருங்க முடியவில்லை. ஆதலால், அவர்களை கடன்காரராக்கியதுமல்லாமல், கல்யாணமன்று பிறேம் தமிழை நம்ப வைப்பதற்கு காப்பி ஊற்றிக் கொண்டு போய் கொடுத்து ஆசை உண்டாக்கி, மண மேடையில் துரோகம் செய்தான்.
Beauty parlour ரில் தமிழைக் கண்ட சம்யூத்தா, சிபீயை வைத்து அந்தக் கடையை விட்டே கலைக்க வைத்தாள். வெளி உலகமே தெரியாதவாறு வாழ வைத்தார் தமிழின் அப்பா செல்வரத்தினம். இதுதான் அவளுக்குக் கிடைத்த முதல் வேலையும் கூட. அதைக் குளப்பினாள், சம்யூத்தா. காரணமாக இருந்தவன் சிபீ. அதுவும், தான் உழைக்காமல் ஜனாம்மாவின் பணத்தில் ஆடிய ஆட்டத்தில் ஒன்று இது.
தனக்கு உண்மையாக இருக்கவில்லை சம்யூத்தா என்றுதான் சிபீ கூறினானே தவிர, கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால், தொலைந்து போங்கள் என்று துரத்தி விட்டான், பிறேமையும், சம்யூத்தாவையும்.
தான் செய்த பிழையினை உணர்ந்து அழுதான் சிபீ. அழுது என்ன பிரயோசனம்இப்போ? தமிழுக்குத் துரோகம் செய்து, அவளின் ஆசையினை, நம்பிக்கையினை, காதலால் அவன் மேல் இருந்த பிணைப்பினை, ஒன்றாய்க் கலந்த உயிரினை ஒரே நொடியில் அழித்துவிட சிபீக்கு என்னென்று மனம் வந்தது? இப்படியான மனநிலை என்னென்று சிபீயினுள் புகுந்தது? எல்லாம் சம்யூத்தாவால்தான்.
தமிழுக்குத் துரோகம் செய்து விட்டு தமிழை சிபீ நெருங்கினான். ஆனால், அவள் விலகினாள்.
ஜனாம்மா இடையில் இருந்து தமிழை சிபீயுடன் சேர்ப்பதற்கு முயற்சிகள் பல செய்கின்றா. ஆனால், அதற்குத் தமிழ் இடம் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழுக்கும், சிபீ்க்கும் இடையிலே ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது என்று மட்டும் ஜனாம்மாவிற்கு விளங்கி வி்ட்டாலும், தமிழிடம் ஜனாம்மா கேட்டாலும் தமிழ் ஒன்றுமில்லை என்று ஒரே சொல்லில் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதும் எமக்குத் தெரியும்.
கல்யாணம் சிபீ்க்கும், யாருக்கும்? என்பது இன்னமும் கேள்விக் குறியாக இருக்கின்றது.
இதில், ஜனாம்மாவிற்கும், சிபீ்க்கும் இடையிலான ஒரு இரகசிய ஒப்பந்தமா? தான் தமிழை தெரியாமல் ஏமாற்றி விட்டேன் என்று சிபீ ஜனாம்மாவிடம் தமிழைத் தன்னுடன் சேர்த்து விடுங்கள் என்று சொல்லி நடத்தப்படும் இரகசிய நாடகமா?
இல்லை, ஜனாம்மாவிற்கும் தெரியாமல் சிபீ நடத்தும் இன்னொருவகையான இரகசிய திட்டமா? தமிழை சிபீ ஏமாற்றி விட்டான். அது துரோகமாகத் தமிழின் பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. ஆனால், சிபீ மனம் திரும்பி தமிழை அணுகும் போதெல்லாம் தமிழ் சிபீயை விலத்துவதும், விலகிப் போவதும் இப்போ நடந்து கொண்டிருக்கின்றது. இதனால், சிபீ தானே ஒரு முடிவெடுத்திருக்கலாம். அதாவது, தமிழைத் தான்தான் கல்யாணம் பண்ணுவது என்று.
வீட்டில், அம்மா மீனா, மாமா கணேஷன் உட்பட அனைவரும் சிபீயிடம் சம்யூத்தா வேண்டாம் என்றும் அவர்களின் குடும்பமே உதவாது என்று கூறியும் சிபீ மிகவும் ஆணித்தரமாகச் சொல்கின்றான் தனக்கும், சம்யூத்தாவிற்கும்தான் கல்யாணம் என்று. இங்குதான் சந்தேகமே ஆரம்பமாகின்றது.
தமிழை எப்படி பிறேம் மண மேடையில் வைத்து தாலி கட்டப் போகும் போது ஏமாற்றி, மணமேடையிலே தமிழை அம்போ என்று தூக்கி எறிந்து விட்டுப் போகையிலே ஏற்பட்ட வலியினை பிறேமின் குடும்பத்திற்கு தான் கொடுக்க வேண்டும் என்று இரகசியமாக சிபீ திட்டம் போட்டு முடிவெடுத்துள்ளது போன்றுதான் தெரிகின்றது.
எனவே, மண மேடையிலே கடைசி மட்டும் சம்யூத்தாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி சம்யூத்தாவை மண மேடையில் தனது பக்கம் இருத்துவான், சிபீ. ஆனால், தமிழிடம் சிபீ please பண்ணிச் சொல்லுவான் நீதான் தாலி முடிக்க வேண்டும் என்று. தாலியினைத் தூக்கி சம்யூத்தாவின் கழுத்துக் கொண்டு போகையிலே, தமிழ் தாலியினை வாங்குவதற்காகக் குனிவாள். அப்போது சிபீ உடனே தமிழின் கழுத்தினிலே தாலியினை கட்டுவான். இதுதான் நடக்கப் போகின்றது.
ஏனென்றால், இன்று கடைசியாக சிபீ தமிழுடன் கதைக்கையிலே ஒருவிதமான பிடிப்பும் இல்லாமலும், நீங்கள் செய்தது துரோகம்தான் என்று பிடிவாதம் பிடிப்பதனையும் இனி தமிழை convince பண்ண முடியாதென்று அறிந்து கொண்டான் சிபீ.
அதுமட்டுமா, ஜனாம்மா, மிகவும் திடமாகச் சொல்லுகின்றா, கடைசியில் தமிழுக்கும், சிபீக்கும்தான் கல்யாணம் நடக்கும் என்றும் அது கடவுளே நடத்தி வைப்பார் என்பதும் மிகவும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!