posted 30th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவின் குரல் கேட்டு அதிர்ந்து போன தமிழின் குடும்பம்.
- தமிழின் அம்மாவின் சம்மதம் மட்டும்தான் தேவை என்று வந்து சம்மதத்தினையும் பெற்ற ஜனாம்மா.
- சிபீதான் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்றதும் உரிமையான மாமா சிபீயை மீண்டும் மாமா என்று அழைத்த தேனுவும், இசையும்.
- உரிமையினைத் தொடரனும் என்று அம்மு, சிபீயின் முறை அத்தை, தமிழின் அம்மா, முறையான சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பதனால் வீட்டுக்கு அழைக்கப்பட்டு பரிசாகக் கொடுக்கப்பட்ட மாத்து மோதிரம் தமிழின் விரலில் மாட்டியது. ஏன்?
- சம்யூத்தாவின் அம்மா வந்ததும் வராததுமாக ஆட்சியினைக் கையில் எடுத்து தனது ஆட்டத்தினைத் தொடங்கினா.
- ஜனாம்மாவின் விரலின் ஆட்டத்தில் ஆடிப் போன சம்யூத்தாவின் அம்மா. இனித் தமிழிடம் வேலை சொல்லுவாவா? வாலாட்டத்தான் முடியுமா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 29.10.2025
ஜனாம்மா தமிழின் வீ்ட்டிற்கு வந்து தமிழின் அம்மாவாகவுள்ள ஹசீனாவிடம் தமிழைத் தனது பேரன் சிபீ்க்கு கல்யாணம் பண்ண விருபத்தினைக் கேட்டதுமல்லாமல், தான் உங்களிடம் கேட்காமல் எல்லார் முன்னிலையிலும் சத்தியமும் பண்ணி விட்டேன் என்றும் மன்னிப்பும் கேட்டா.
தவறு செய்து விட்டோமென்றால், யாராக இருந்தாலும் உடனே மன்னிப்புக் கேட்டு விட வேண்டும். இதுதான் மனிதத் தன்மை.
தமிழின் அம்மாவின் அனுமதி கிடைத்த சந்தோஷத்தினை முத்தம்மாவுடன் பகிர்ந்து கொண்டா ஜனாம்மா. ஜனாம்மாவுக்கும் ஒரு சொந்தமும் இல்லை இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு. வீட்டு வேலைக்காக வந்த முத்து இப்போது அவவின் நல்ல குணத்தினாலும், நேர்மையினாலும், எப்பவுமே ஜனாம்மாவுடன் கூட நின்றதினாலும், அவ ஜனாம்மாவின் உயிரினில் கலந்து விட்டா.
தமிழின் குடும்பம் தவிக்கையிலே உறவுகள் அனைவரும் அவர்களை விட்டு அகன்று போய் விட்டார்கள். ஆனால், தமிழின் தகப்பனுக்கு வேலை செய்தவன், கணேசன், என்பவன்தான் தனது மனைவியின் நகையினை விற்று அந்த பணத்தினை தமிழின் கையில் கொடுத்து தானும், உங்கள் அப்பாவும் சென்னையில் வடபழனி கோவில் பக்கமாக ஒருவரை அடிக்கடி பார்க்கப் போவோம் என்று சொல்லி உதவியவன். அதனால்தான் தமிழ் சென்னைக்கு குடும்பத்தினைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.
தெய்வமாகப் பார்த்து சிபீயையும் காட்டியது, ஜனாம்மாவையும் தலைசுற்றி தமிழின் முன்னால் விழவைத்தது. இதெல்லாம், நாம் வணங்கும் தெய்வமானது எங்களது வாழ்க்கையில் போடும் route ஆகும். தப்பான பாதைக்கு அது போகவே போகாது.
கஷ்ட காலமானது நமது வாழ்க்கையில் விளையாடுவதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்தானே! அதற்குள்ளாலேயும் அந்த தெய்வம் பக்குவமாக வழி நடத்திச் செல்லும். அதனைத் தான் இங்கு தமிழின் குடும்பத்தில் காணலாம்.
இன்னமும் குழந்தைத் தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைக்கு washroom போக வேண்டி இருக்கையிலே ஒருதரும் இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால், இசை ஒரு வலது குறைந்த பிள்ளை என்பதனால். ஆனால், ஹசீனாவைத் தெய்வம் காட்டவில்லையா? இப்ப மட்டும் அதே ஹசீனாதான் தமிழின் குடும்பத்தினைக் காத்துக் கொண்டும் இருகின்றா. இதெல்லாம் யாராலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று நினைக்கிறீங்கள்? நாம் கையெடுத்துக் கும்பிட்ட தெய்வம் மூலம்தான். நல்லதினை தமிழின் குடும்பமே செய்தது. அதனால், தெய்வம் அவர்கள் பக்கம் நின்று காத்துக் கொண்டிருக்கின்றது.
சம்யூத்தாவின் அம்மா, தனது நிலையினை மறந்ததுமல்லாமல், முன்னால் நிற்கும் தமிழுக்கும், ஜனாம்மாவின் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று கூட சிந்திக்கும் அறிவு இல்லாமல், தமிழை தனக்கு எடுபிடி வேலையினைச் செய்ய வைத்தா. ஏனென்றால், தாங்கள் போட்ட தூண்டிலில் சிபீ சிக்கித் தவிக்கின்றான் என்ற திமிரில். ஆனால், தமிழோ பக்குவமாகவும், பணிவாகவும் நடந்து கொண்டா. மகள் சம்யூத்தா தமிழுக்குக் கொடுத்த torture காணததென்று இவ தாய் தொடங்கி விட்டா.
இந்தக் கதை எல்லாம் ஒரு நாளைக்கு அதுவும் கெதியாக ஜனாம்மாவின் காதுக்கு முத்தம்மாவால் போகும். அப்போ இருக்கின்றது இவர்கள் அனைவருக்கும்.
அவ order போடுவதும், தமிழைச் check பண்ணுவதும் எப்படியாவது தனது மகள் சம்யூத்தாவுக்கு சிபீயுடன் கல்யாணம் முடியும் முன்பு தமிழினை அடக்கி வைக்க வேண்டும் என்று பிழையான roadஐப் போட்டு ஆடுகின்றா. அதெல்லாம், ஜனாம்மாவின் ஆள்காட்டி விரலின் ஆட்டத்தினால் அடங்கிப் போய் விட்டது.
அதைவிட, தமிழ் மீனாவிற்காக எடுத்த பணத்தினை, தமிழ் களவெடுக்கின்றாள் என்று எல்லாரையும் தான்தான் இந்த வீட்டு எஜமானி என்ற நினைப்பினில் கூப்பிட்டு தான் எடுத்த வீடியோவினையும் ஆதாரமாகக் காட்டித்தானே பார்த்தா. எப்பவும், நம் முன்னால் நிற்பவர் யார் என்று அறியாமல் எங்கள் திரு வாயினைத் துறக்கக் கூடாது. அதேமாதிரி, கண்ணாடிக்கு உள்ளே இருக்கின்றோம் என்றால், கண்ணாடிக்கு வெளியே நிற்பவரை யார் என்று தெரியாமல் குரல் உசத்தவும் கூடாது. இப்படி குரல் உசத்தின சம்யூத்தாவின் அம்மாவிற்கு நல்ல பாடம் கற்பித்தா மீனா. மீனாவும் தமிழை தங்கள் வீட்டுப் பொண்ணு என்றும் அவளை எங்களால் விட்டுக் கொடுக்கவே முடியாது என்றும் விளங்கிச் சொன்னாவோ இல்லையோ, ஆனால், மீனா சொன்னா.
அதுமட்டுமல்லாமல், சிபீயின் தாயினை ஒருவருக்கும் முன்னாலும் காட்டிக் கொடுக்காத தமிழின் நல்ல குணத்தினையும் சிபீக்கு ஒவ்வொன்றாக விளங்கப் படுத்தினா ஜனாம்மா.
சிபீ விளங்கிக் கொள்ளுவதற்கு இன்னமும் இருக்கின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!