posted 28th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கன்னிக் கப்பு நடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ் எல்லாவற்றினையும் செய்து முடித்து விட்டா. இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து கும்பத்தினை எட்டி உதைத்த வெண்பா.
- ஷியாமின் தாயும், தகப்பனும் ஜனாம்மாவின் வீட்டிற்கு வந்து தங்களது வீ்ட்டு நிலைமையினைத் தாழ்மையாகச் சொன்னார்கள்.
- இதே ஆட்கள்தான் தமிழின் வீட்டில் தமிழுக்கு தாலி ஏறப்போன போது தமிழின் குடும்பத்தினைத் தூக்கி எறிந்து விட்டு சென்றவர்கள். ஆனால் இவர்கள் தமிழை ஜனாம்மாவின் வீட்டில் எதிர்பார்க்கவில்லை.
- யாருக்கும் அடங்காத ஜனாம்மா, தமிழுக்கு அடங்கி ஆறுதலாகும் மனமும், எல்லாப் பொறுப்புகளும் தமிழிடமே கையளிக்கப்பட்டுள்ளது என்பதும் ஷியாமின் பெற்றாருக்குத் தெரியாது. தெரிந்தால் இவர்கள் நடுங்கிப் போய் விடுவார்கள். அந்த நடுக்கம் இவர்களுக்கு கெதியில் வரும்.
- கன்னிக் கப்பினை ஒழுங்காக பிடித்து நாட்ட முடியாமல் கை நழுவுகையில் அதனைத் தாங்கிப் பிடித்தாள் தமிழ். அதனைப் பார்த்து ஜனாம்மா சைகையினை கண்ணால் காட்டி இரசித்தா. இதன் அர்த்தம்தான் என்ன?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 27.10.2025
கை தவறியது கன்னிக் கப்பு. அதனைக் கூட கீழே விழாமல் தாங்கிப் பிடித்தாள் தமிழ். அதாவது, ஜனாம்மாவுக்கு கூடாத சகுனமானதினை நடக்காமல் தவிர்த்தாள் தமிழ். இதுவும் சிபீக்கு ஏற்படவுள்ள அபசகுனத்தில் ஒன்றா என்றும் தோன்றுகின்றது. அதற்கும் தமிழ்தான் காத்து நின்றாளோ! அதனால், இந்த நிகழ்வு இனிதே நிறைவேறியது.
இந்த நிகழ்வில் ஷியாமின் குடும்பமும் பங்கு கொண்டனர். என்னதான் நடக்கின்றது? உண்மையாக ஷியாம்தான் மணப்பெண்ணா? ஆனால், தமிழின் தகப்பனைத் தெரியும் என்று தமிழின் அறையினுள் வந்தவன் யாரு? அவனுக்கும் ஷியாமுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? இவனும் ஜனாம்மாவின் துப்பாக்கிக்கு வேலை வைக்க வந்துவிட்டானா? இவனை ஒழுங்கு படுத்தியது யாரு? கணேஷனா? அல்லது பிறேமா?
தமிழின் அறையினுள் துப்பாக்கியுடன் மீண்டும் வந்த ஜனாம்மா. இப்ப சொல்லுவான் தான் யாரென்று. ஆனால், ஒன்று இவன் என்னென்று பாதுகாப்பெல்லாம் தாண்டி அதுவும் தமிழின் அறைக்கு வந்தான்? கூடுதலான chance இதற்குக் காரணம் பிறேமாகத்தான் இருக்க வேண்டும்.
நான் எப்பவோ எதிர்வு கூறியது போன்று ஷியாமின் குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம்தான். ஆனால், தமிழின் கல்யாணத்தில் ஏதோ தமிழின் குடும்பத்தினை விட பெரிய உசத்தி என்றல்லவா வந்தார்கள். ஆனால், அங்கு தமிழ் குடும்பத்தின் சொத்திற்கு ஏதோ பங்கம் நடந்தபடியினால், தமிழின் கையினை உதறிவிட்டுப் போனவன்தானே பிறேம். இப்போ இங்கு ஜனாம்மாவின் சொத்திற்கு ஷியாமை தூண்டிலில் போட்டு சிபீயைப் பிடிப்பதற்காக ஒவ்வொரு வீடாக அலைகின்ற கூட்டமாக இருக்கின்றது.
இது எங்கேயோ சிக்கப் போகின்றது. ஷியாமினால், கிளறி விடப்பட்டது அம்முவின் பிரச்சனை. அதற்குக் காரணம் கணேஷன்தான். அதாவது, பிரகாஷினைப் பணத்திற்காக கொலை செய்ய முயற்சித்ததாக கணேஷன் தமிழின் தகப்பனின் மேலே வைத்தியசாலையில் வைத்து பொய் சாட்சி சொல்ல வைத்தான். அதனால்தான், ஜனாம்மா செல்வரத்தினத்தின் மேலே அவ்வளவிற்கு கொலை வெறியில் இருக்கின்றா.
இதனை, முத்தம்மா மூலம் அறிந்து கொண்ட தமிழ், இனி அந்தப் பிரச்சினையினை தீர்க்க வேண்டும். அப்போதுதான், தங்கள் குடும்பத்தின் மேலுள்ள ஜனாம்மாவின் கோபம் இல்லாமல் போகும் என்ற தமிழின் திட்டமானது இனி நிறைவேற்றப் பட வேண்டும்.
இப்போது செல்வரத்தினத்தினை சேலத்தில் பார்த்தேன் என்று தமிழுக்கே தெரியாதவன் ஒருவன் தமிழைச் சந்திக்க தமிழின் அறைக்கே வந்தான் இல்லை, வரவழைக்கப்பட்டு நேராகவே தமிழின் அறைக்கு அனுப்பப்பட்டான். இவனிடம் இருந்த தமிழின் தகப்பன் யார் என்ற உண்மையானது வெளியே வருமா? இது ஜனாம்மாவிற்கு இப்போ தெரிய வருமா?
தமிழின் தகப்பன் காணாமல் போய் விட்டார் என்று வீட்டில் ஒருவருக்கும் தெரியாதே! அப்போ யார் இந்த வேலையினை மிகவும் நுணுக்கமாகச் செய்தது?
தமிழின் குடும்பம் செல்வரத்தினத்தினைப் பற்றி தெரிந்தவர்கள் ஷியாமின் குடும்பம் மட்டும்தான். அவர் தமிழின் கல்யாணத்தின் முதல்நாள் இரவு காணாமல் போய்விட்டார். அப்போதே நான் எனது analysis குறிப்பிட்டிருந்தேன் இது பிறேம் குடும்பத்தின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று. அந்த doubtதான் இப்போது சரியென்று தோன்றுகின்றது.
செல்வரத்தினம் காணாமல் போனதற்கு பிறேம்தான் காரணம் என்று விளங்குகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!